PR686B49DA06FE75E48B2B12D946BAC84F079
லட்சுமி விலாஸ் வங்கி இன்று முதல் (நவம்பர் 27, 2020) DBS – டிபிஎஸ் வங்கி கிளைகளாக செயல்படும் என்று, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தை டிபிஎஸ் DBS வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைப்பதற்கான திட்டத்தை இந்திய அரசு இன்று அனுமதித்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு நியமிக்கப்பட்ட தேதியில் அதாவது நவம்பர் 27, 2020 முதல் நடைமுறைக்கு வரும். லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் அனைத்து கிளைகளும் இந்த தேதியிலிருந்து அமல்படுத்தப்படும். லட்சுமி விலாஸ் வங்கி இன்று முதல் டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் கிளைகளாக செயல்படும்.
லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் டெபாசிட்டர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் வாடிக்கையாளர்களாக 2020 நவம்பர் 27 முதல் அமல்படுத்த முடியும். இதன் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் மீதான தற்காலிக தடை நீங்கிவிடும். 2020 நவம்பர் 27 முதல் லக்ஷ்மி விலாஸ் வங்கி லிமிடெட் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com