விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்!-இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை மனு கொடுத்த எதிர்க்கட்சி தலைவர்கள்..!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி – ஹரியானா எல்லையில் விவசாயிகள் தொடர்ந்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அரசு அளித்த பரிந்துரைகளையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர். போரட்டம் தொடரும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்பி இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதாராம்யெச்சூரி ஆகியோர், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக் கொடுத்துள்ளனர்.

இதற்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகம் செய்துவிட்டது; நாங்கள் அனைவரும் விவசாயிகளோடு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply