பாழடைந்த குளத்திற்குள் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் 23 வயது இளைஞர் பலி!-இரவு நேரத்தில் திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் நடந்த துயரம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி, வளன் நகர் பகுதிக்கு நேற்று (10.12.2020) இரவு 10.00 மணியளவில், புள்ளம்பாடியிலிருந்து 10 நபர்களுடன் கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த TN 46 L 3943 என்ற லாரி சாக்கடையில் சரிந்து அருகில் இருந்த கீழமுல்லக்குடி ஊராட்சிக்கு சொந்தமான பாழடைந்த குளத்திற்குள் கவிழ்ந்ததில், லாரியில் இருந்த 10 நபர்களில் மணிகண்டன் (வயது 23), த /பெ. பெருமாள், மணக்காடு, புள்ளம்பாடி என்பவர் தண்ணீரில் மூழ்கி அவர் மீது கற்கள் விழுந்ததில் தப்பிக்க வழியின்றி நீரில் மூழ்கினார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல் நிலைய போலிசார், வெகுநேரம் தேடியும் மணிகண்டன் உடல் கிடைக்காமல், பிறகு தீயணைப்பு மீட்புத் துறையினரின் உதவியுடன் மணிகண்டன் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, நீரிலிருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர்.

இந்த பாழடைந்த குளம், புனித வளனார் கல்லூரி விவசாயப் பண்ணை நிர்வாகத்திடம் இருந்து, கீழமுல்லக்குடி ஊராட்சிக்கு தானமாக பெற்ற நிலத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெட்டப்பட்து. ஆனால், இந்த குளத்திற்கு பாதுகாப்பு தடுப்பு சுவர்களோ (அல்லது) பாதுகாப்பு தடுப்பு வேலியோ இதுநாள்வரை அமைக்கப்படவில்லை. எவ்வித பயன்பாடும் இன்றி மனித உயிர்களுக்கும், ஆடு, மாடு மற்றும் கால்நடைகளுக்கும், குறிப்பாக குழந்தைகளின் உயிர்களுக்கும் இது அச்சுறுத்தலாக இன்றுவரை இருந்துவருகிறது.

இந்த பாழடைந்த குளத்தில்தான் நேற்று லாரி கவிழ்ந்து மணிகண்டன் என்பவரின் உயிரை பலி வாங்கியுள்ளது.

-ஆர்.சிராசுதீன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN December 11, 2020 9:44 pm

Leave a Reply