தேசியக் கட்சிகள் என்றால் என்ன? மாநிலக் கட்சிகள் என்றால் என்ன?-புதிய அரசியல் கட்சியை 30 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்…!-இது படிக்க மட்டுமல்ல; பாதுகாக்கவும் பயன்படும்.

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டதுதான் இந்தியத் தேர்தல் ஆணையம்.

அத்தகைய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, செயல்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை மீதும், குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic Voting Machine) குறித்தும், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வெளிப்படையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தேர்தலில் வெற்றியடைந்தவர்கள் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுவதும்; தோல்வி அடைந்தவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலையையும், நேர்மையையும், சந்தேகிப்பதும் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுவரை எதுவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

சரி விசியத்திற்கு வருவோம், இந்தியத் தேர்தல் ஆணையம் கட்சிகளின் வகைப்பாடுகளை 1.தேசியக் கட்சிகள், 2. மாநிலக் கட்சிகள், 3.பதிவு செய்யப்பட்ட கட்சிகள்- என்று தரம் பிரித்துள்ளன.

‘தேசிய கட்சி’ அந்தஸ்துப்பெற என்ன செய்ய வேண்டும்?!

ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், மொத்த உள்ள மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில், அதாவது 11 இடங்களில் குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும் (அல்லது) மக்களவை (அல்லது) சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு (அல்லது) அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே ‘தேசிய கட்சி’ என்ற அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் பெறமுடியும்.

அந்தவகையில், தற்போது கீழ்காணும் 7 கட்சிகள்தான் இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ‘தேசியக் கட்சிகள்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

1.பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி)
2.பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க)
3.இந்தியப் பொதுவுடமைக் கட்சி (சி.பி.ஐ)
4.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ (எம்)
5.இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.என்.சி)
6.ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு)
7.சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி
)

‘மாநில கட்சி’ அந்தஸ்துப்பெற என்ன செய்ய வேண்டும்?!

ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி, மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும் (அல்லது) மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும் (அல்லது) மக்களவை (அல்லது) சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியிலோ (அல்லது) 2 சட்டப்பேரவை தொகுதிகளிலோ வெல்ல வேண்டும் (அல்லது) 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மட்டுமே ‘மாநிலக் கட்சி’ என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

இப்போது புரிகிறதா?! லெட்டர் பேடு கட்சிகளும், சின்ன சின்ன அரசியல் கட்சிகளும், ஏன் பெரிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணிக்கு அலைகின்றன என்று; பிரபலமான மக்கள் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும், சின்ன சின்ன அரசியல் கட்சிகள் எதையும் தங்களோடு கூட்டு சேர்ப்பதில்லை என்று ஒட்டுமொத்தமாக ஒரு முடிவெடுத்துவிட்டால், உண்மையிலுமே மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகள் அனைத்தும் இங்கு காணாமல் போய்விடும். மேலும், கட்சி நடத்துவதற்கு பணம் கிடைக்காமல் தவிக்க வேண்டிய நிலை உருவாகி விடும்.

ஆனால், அந்த மாதிரியான அதிசயம் இங்கு நிகழ வாய்ப்பில்லை. ஏனென்றால், இங்குள்ள பிரபலமான அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் மீதே நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். மேலும், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய நடு நிலையான வாக்காளர்கள் அனைவரும் பிரபலமான அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். இதை ஈடுக்கட்டுவதற்காகதான் பிரபலமான அரசியல் கட்சிகள் அனைத்தும், தேர்தல் நேரத்தில் சின்ன, சின்ன அரசியல் கட்சிகளின் தயவை நாடுகின்றன; தேடுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் அவர்களை கழட்டியும், விரட்டியும் விடுகின்றனர். இதுதான் காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. எழுதப்படாதச் சட்டமாகவும் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த உண்மையை மனச்சாட்சி உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

அந்தவகையில், கீழ்காணும் 49 கட்சிகள் இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ‘மாநிலக் கட்சிகள்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

1.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க)
2.திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க)
3.பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க)
4.தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தே.மு.தி.க)
5.அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (ஏ.ஐ.டி.சி)
6.அனைத்திந்திய ஜனநாயக முன்னணி (ஏ.யு.டி.எப்)
7.அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யு.)
8.அசாம் கன பரிசத் (ஏ.ஜி.பி)
9.பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி)
10.போடோலாந்து மக்கள் முன்னணி (பி.பி.எப்) 11.அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (ஏ.ஐ.எப்.பி)
12.நாம் தமிழர் கட்சி
13.அரியானா ஜாங்கிட் காங்கிரஸ் (பிஎல்) எச்.ஜெ.சி (பிஎல்)
14.மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி (எச்.ஜெ.சி (பிஎல்)
15.இந்திய தேசிய லோக்தளம் (ஐ.என்.எல்.டி)
16.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்)
17.ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (ஜே.கே.என்.சி)
18.ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜே.கே.என்.பி.பி)
19.ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி)
20.ஜனதா தளம் (ஐக்கியம்) (ஜே.டி.யு) 21.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்)
22.ஜார்க்கண்ட் விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) (ஜே.வி.எம்)
23.ஜனதா தளம் (மதச் சார்பற்ற) (ஜே.டி.எஸ்)
24.கர்நாடக ஜனதா கட்சி (கே.ஜே.பி)
25.கேரள காங்கிரஸ் (எம்) (கே.ஈ.சி (எம்)
26.லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.எஸ்.பி)
27.மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்)
28.மகாராட்டிரவாதி கோமந்த கட்சி (எம்.ஏ.ஜி)
29.மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி
30.மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்)
31.மிசோரம் மக்கள் மாநாடு (எம்.பி.சி)
32.நாகாலாந்து மக்கள் முன்னணி (என்.பி.எப்) 33.அனைத்திந்திய என். ஆர். காங்கிரஸ் (ஏ.ஐ.என்.ஆர்.சி.)
34.மக்கள் ஜனநாயகக் கூட்டணி
35.அருணாச்சல மக்கள் கட்சி (பி.பி.ஏ)
36.இராஜ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி)
37.ராஜ்டீரிய லோக் தளம் (ஆர்.எல்.டி)
38.புரட்சியாளர் சமத்துவக் கட்சி (ஆர்.எஸ்.பி)
39.சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி)
40.சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி)
41.சிவ சேனா (எஸ்.எச்.எஸ்)
42.சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்)
43.தெலுங்கானா இராட்டிர சமிதி (டி. ஆர்.எஸ்)
44.தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.எப்)
45.ஐக்கிய ஜனநாயகக் கட்சி (யு.டி.பி)
46.சோரம் தேசியக் கட்சி (இசட்.என்.பி)
47.தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் (த.ம.க)
48.மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க)
49.மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க)

இவைத் தவிர மற்றவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற தகுதியில் உள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியை 30 நாட்களுக்குள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்!

முக்கிய குறிப்பு: புதிய அரசியல் கட்சியை, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு முன்பு, அதுக்குறித்து அச்சு (நாளிதழ்களில்) ஊடகங்களில் பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும். புதிதாக பதிவு செய்யப்படும் அந்த அரசியல் கட்சிக் குறித்து ஏதாவது ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் யாரு வேண்டுமானாலும் முறையிடலாம்.

அந்த பகிரங்க அறிவிப்பு, உதாரணமாக கீழ்காணும் அறிவிப்பைப் போன்று இருக்க வேண்டும்.

56-197A-2019-Mera-watan-party-1-1

புதிய அரசியல் கட்சி பதிவுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வகையில், அரசியல் கட்சிகள் பதிவு கண்காணிப்பு மேலாண்மை முறை என்ற புதிய வசதியை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுக்குறித்த மேலும் விபரங்களுக்கு, இங்கு நாம் பதிவு செய்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ்காணும் வழிகாட்டும் விபரக் குறிப்புகளை படித்துத் தெரிந்துக் கொள்ளவும்.

Amended_Guidelines_for_Party_registration

Registration-of-Political-Parties-Choice-of-Name-for-Political-Party-English

பதிவு செய்யப்படும் புதிய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் தேர்தல் சின்னங்கள்..!

images_of_all_free_symbols

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Mobile No: 9842414040

Leave a Reply