பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் இன்று வரை அவர்கள் தீர்மானமாக உள்ளனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும், நாடுமுழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும் முழு ஆதரவு அளித்து, பல்வேறு வகையான உதவிகளையும் அவர்களுக்கு செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
ஆனால், அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும், இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை என்றும், பிரதமர் நரேந்திரமோதி உள்பட மத்திய அரசின் அனைத்து ஆதரவாளர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு 8 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார். மேலும், வேளாண் சட்டங்களில் கீழ்காணும் திருத்தங்களை செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
1.குறைந்தபட்ச ஆதரவு விலை Minimum Support Price (MSP) குறித்து விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க அரசு தயாராக உள்ளது.
2.விவசாய உற்பத்தி சந்தைக் குழு Agricultural Produce Market Committee (APMC)-க்கு வெளியே தனியார் சந்தைக்கு வரி விதிக்க மாநில அரசிற்கு அனுமதி வழங்கப்படும்.
3.வேளாண் சட்டம் குறித்து எந்தவொரு சர்ச்சையையும் தீர்க்க நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
4.விவசாய ஒப்பந்தத்தை பதிவு செய்ய மாநில அரசிற்கு உரிமை வழங்கப்படும்.
5.விவசாயிகள் தங்கள் நிலத்தில் என்ன செய்கிறாரோ அதை யாராலும் செய்ய முடியாது; இதனால் இந்த சட்டம் எந்தவிதமான இடமாற்றம், விற்பனை, குத்தகைகள் மற்றும் அடமானங்களை அனுமதிக்காது.
6.விவசாயிகளின் நிலத்தில் ஒப்பந்தக்காரர்கள் எந்த நிரந்தர மாற்றத்தையும் செய்ய முடியாது.
7.உழவர் நிலத்தில் எந்தவொரு தற்காலிக கட்டுமானத்திற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு கடன் வழங்காது. நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், விவசாய நிலத்தில் ஒப்பந்தக்காரர்கள் தரையிறங்குவதற்கு எந்தவொரு செயல்முறையையும் சட்டம் அனுமதிக்காது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com