மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இராமகிருஷ்ண மடத்தில் உள்ள வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல், வங்காளப் புரட்சியாளரும், இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதில் புரட்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 வயதில் தூக்குமேடை ஏறிய தியாகி குதிராம் போஸ் சிலைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
மேலும், மேற்கு வங்காளம் மாநிலம், மிட்னாபூர் பொதுக் கூட்டத்தில் பொதுமக்களிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆக்ரோஷமாக உரையாற்றினார்.
-எஸ்.சதிஸ் சர்மா
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com