பாஜகவில் இணைந்த மேற்கு வங்க அமைச்சர்!-மம்தா பானர்ஜி கட்சியில் இணைந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பாஜக மக்களவை உறுப்பினர்!-மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறும் அதிர்ச்சி சம்பவங்கள்..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், சுவேந்து அதிகாரி. (File Photo)

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சிதறடிக்க, பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய திட்டம் வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. அவற்றின் முதல் கட்டமாக மம்தா பானர்ஜியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த, மேற்கு வங்க போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி மற்றும்
சில எம்எல்ஏ-க்களை அங்கிருந்து பாஜக விற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜக-வில் இணைந்து இருப்பது, மேற்கு வங்க மாநில அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுவேந்து அதிகாரி முதலில் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.

மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜி.

சுவேந்து அதிகாரியின் ராஜினமா கடிதத்தில் தேதி குறிப்பிடாமல் இருந்ததைக் காரணம் காட்டி, அவரது ராஜினமாவை ஏற்க மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜி மறுத்தார்.

இந்நிலையில், பதவிகளை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

வேறு வழியில்லாமல், அவரது ராஜினமாவை ஏற்றுக்கொண்டதாக மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக களத்தில் இறங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மேற்கு வங்க மாநிலம், பிஷ்னுபூர் தொகுதி பாஜக எம்.பி.யும், மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணித் தலைவருமான செளமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கானை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

பாஜகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக சுஜாதா மொண்டல் கான் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது.

பாஜக எம்.பி செளமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான்.

பிஷ்னுபூர் தொகுதி பாஜக எம்.பி.யும், மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணித் தலைவருமான செளமித்ரா கான்.

பாஜக எம்.பி செளமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தனது மனைவி இணைந்ததால், அதிருப்தியில் உள்ள பாஜக எம்.பி. செளமித்ரா கான், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து, அதற்கான சட்டப்பூர்வமான நோட்டிசையும் தனது மனைவி சுஜாதா மொண்டலுக்கு இன்று (21.12.2020) அனுப்பியுள்ளார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply