கஞ்சா புகைத்து இளைஞர்கள் சீரழிகிறார்கள்!-ஏற்காடு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொது மக்கள் மனு!

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர், இன்று ஏற்காடு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏற்காட்டை சேர்ந்த பொது மக்கள் சிலர் காவல் நிலையம் வந்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர்.

1.ஏற்காட்டை சேர்ந்த இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து இங்கு வரும் கஞ்சாவினை புகைத்து சீரழிவதை தடுக்க வேண்டும்.

2.ஏற்காடு சுற்றுலா தலம் என்பதால் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.

3. புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

4. ஏற்காட்டில் உள்ள கொளகூர் மற்றும் குப்பனூர் ஆகிய மலைப்பாதைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளை அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர், வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என பொது மக்களிடம் கேட்டறிந்தார். ஏற்காடு நுழைவு பகுதியான ஒன்றிய அலுவலகம் உள்ள பகுதியில் லாரிகள், டிராக்டர்கள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டதாலும், அங்கு விபத்துகள் ஏற்படுவதாக அவர்கள் அப்போது தெரிவித்தர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply