மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களின் வாக்கைத் தேர்தலின்போது பதிவு செய்யலாம். ஆதலால், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்ளுக்கும் வாக்களிக்கும் உரிமை, வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு எந்த மாநிலத்தில், எந்தத் தொகுதியில், எந்த ஊரில் வாக்களிக்க உரிமை இருக்கிறதோ அங்கு வாக்குகளைச் செலுத்தலாம்.
இடிபிபிஎஸ் -Electronically Transmitted Postal Ballot System (ETPBS) முறையின் கீழ், தபால் வாக்குகள் மின்னணு முறையில் சர்வீஸ் வாக்குகளாகச் செல்லும். சர்வீஸ் வாக்குகள் அளிக்கும் வாக்காளர் குறிப்பிட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் வாக்களிக்க இருக்கும் கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு அதைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தபால் வாக்கு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணிக்குள் சேர வேண்டும். போலீஸார், ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இதுபோன்ற முறையில்தான் வாக்களிக்கின்றனர்.
இந்த முறையைத்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய தபால் வாக்குகள் முறையைத் தேர்வு செய்யலாம். ஆனால், அவர்களுக்கு இடிபிபிஎஸ் (ETPBS) முறை வேறுபட்டதாக இருக்கும்.
இந்த செயல்முறை திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பும், இதை குறைக்கூறி ஒரு சில விமர்சனங்களும், விவாதங்களும் தற்போது எழுந்துள்ளது.
இருந்தாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com