நடிகர் ரஜினி நலமாக உள்ளார்!-இரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர மற்ற எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை!- ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (25.12.2020) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அங்கு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. டிசம்பர் 22-ம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. அப்போது முதல் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அவரது இரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு ஏற்பட்டது. இதனால், தொடர் சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு திரும்புவதற்கு முன்னர் இரத்த அழுத்தம் சீராகும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார். இரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர மற்ற எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. மருத்துவ ரீதியில் அவர் ஸ்திரமாக உள்ளார்.

இவ்வாறு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply