மோட்டார் பைக் மோதியதில், இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி காயம்!-திருச்சி காவிரி பாலத்தில் நடந்த விபரீதம்.

மோட்டார் பைக் மோதியதில் காயமடைந்த (இரண்டு கால்களும் நடக்க முடியாத) மாற்றுத் திறனாளி செந்தில் குமார்.

மாற்றுத் திறனாளி மீது மோதிய (ROYAL-ENFIELD (UNIT OF EICHER LTD) / CLASSIC 350 BS IV) மோட்டார் பைக்.

மோட்டார் பைக்கில் வந்த நபர்கள்.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அருகே உள்ள கீழகளமலை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கால்களும் நடக்க முடியாத செந்தில் குமார் என்ற மாற்றுத் திறனாளி, தனது மாற்றுத் திறனாளி வாகனத்தில் சமயபுரம் டோல்கேட்டில் இருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை பகுதியை கடந்து தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் இன்று (10.01.2021) மாலை 5.20 மணியளவில் வந்துக்கொண்டிருந்தபோது, எதிர் திசையில் சஞ்சிவி நகர் பகுதி இருந்து இரண்டு இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழி பாதையில் TN48 AJ 8461 ROYAL-ENFIELD (UNIT OF EICHER LTD) / CLASSIC 350 BS IV என்ற மோட்டார் பைக்கில் காவிரி பாலத்தைக் கடக்க முயன்றபோது, காவிரி பாலத்தில் வந்துக்கொண்டிருந்த மாற்றுத் திறனாளி வாகனத்தின் மீது மோட்டார் பைக் மோதியதில், மாற்றுத் திறனாளி செந்தில் குமார் காயமடைந்தார். அருகில் இருந்த நபர்கள் மாற்றுத் திறனாளி செந்தில் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார் பைக் ஓட்டி வந்த மற்றும் மோட்டார் பைக்கில் பின் சீட்டில் அமர்ந்து வந்த அந்த இரண்டு இளைஞர்களும் மதுபோதையில் இருந்துள்ளனர். எதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தீர்கள்?! என்று அருகில் இருந்த நபர்களை மிரட்டியும் உள்ளனர்.

மேலும், இந்த விபத்து சம்மந்தமாக வழக்கு பதிய விடாமல் கட்டபஞ்சாயத்து மூலம் சமரசம் செய்வதற்கும் இவர்கள் தரப்பில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விசியத்தில் மாற்றுத் திறனாளி செந்தில் குமாரை அரசு மருத்துவர்களும், காவல்துறையும்தான் காப்பாற்ற வேண்டும்.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply