இந்தியத் தொலைக்காட்சிகளின் டிஆர்பி (Television Rating Point-TRP) புள்ளிகளை கணக்கிடும் ‘பார்க்’ (Broadcast Audience Research Council (BARC) India) அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பர்த்தோ தாஸ்குப்தா வீட்டில் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாயும், தங்கம், வெள்ளி உள்பட, அதிக விலை மதிப்புமிக்க கைக்கடிகாரங்களும், பரிசுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
barc-india-dismayed-at-misrepresentation-of-its-communication-by-republic-network
இவை அனைத்தும் அர்னாப் கோஸ்வாமி தனது ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ‘ரிபப்ளிக் டிவி’ மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சியான ‘ரிபப்ளிக் பாரத்’ ஆகியவற்றை பிரபலப்படுத்த பர்த்தோ தாஸ் குப்தாவுக்கு லஞ்சமாக வழங்கிய பணத்தில் வாங்கப்பட்டது என்று மும்பை காவல்துறையினரிடம் பர்த்தோ தாஸ்குப்தா ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் மும்பை காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் சிறையில் உள்ள ‘பார்க்’ அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பர்த்தோ தாஸ் குப்தாவும், ரிபப்ளிக் தொலைக்காட்சி உரிமையாளரும், ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடிய நாட்டின் இராணுவ இரகசியங்கள் உள்பட, பல்வேறு விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500 பக்கங்களைக் கொண்ட இந்த உரையாடல்கள் நாடு முழுவதும் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று, பர்த்தோ தாஸ்குப்தாவின் மகள், பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதே போல், சிறையில் தனது கணவரை சித்திரவதை செய்ததாக, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு, பார்த்தோ தாஸ்குப்தாவின் மனைவி சாம்ராஜ்னி புகார் அனுப்பியுள்ளார்.
இந்த வழக்கில் அரசியல் தலையீடும், ரிபப்ளிக் தொலைக்காட்சி உரிமையாளர் தரப்பினரின் அதிகாரக் குறிக்கீடும் அதிகம் இருப்பதால், ‘பார்க்’ அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.