குளத்தில் குதித்து சிறுவனின் உடலை மீட்டெடுத்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர்!-‘கொரோனா’ விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்…!

திருவெறும்பூர் காவல் நிலையம்.

திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலன்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சத்திடல் கிராமத்தில், நேற்று (பிப்ரவரி 02) மதியம் ஹரி கிருஷ்ணன் என்ற 8 வயது சிறுவன் காணாமல்போனதாக வந்த தகவலையடுத்து, சிறுவனை தேடும் பணியில் திருவெறும்பூர் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 03) காலை திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலனுக்கு வந்த தகவலையடுத்து, மஞ்சத்திடல் குளத்துப் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஞானவேலன், குளத்துக் கரையில் காணாமல்போன சிறுவனின் ஆடைகள் இருப்பதை கண்டு சிறுவன் ஹரி கிருஷ்ணன் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி ருக்கலாம்?! என்பதை உணர்ந்து, தனது சீருடையை அவிழ்த்து வைத்துவிட்டு குளத்தில் குதித்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டார்.

நீண்ட நேரத் தேடுதலுக்கு பின், இறந்த நிலையில் சடலமாக தண்ணீருக்குள் கிடத்த சிறுவனை, திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து, அதன் பிறகு சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பெற்றோர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்..!

‘கொரோனா’ விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகளை தயவு செய்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்…! அவர்கள் வெளியில் விளையாட செல்லும்போது யாருடன் செல்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதை அக்கறையோடு கண்காணியுங்கள்…! முடிந்தவரை ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை, கிணறு… போன்ற நீர் நிலைகள் மற்றும் ஆபத்தான இடங்களுக்கு செல்வதற்கு அவர்களை அனுமதிக்காதீர்கள்..! ஏனென்றால், இளம் கன்று பயமறியாது; போன உயிர் திரும்ப வராது.

பெற்றோர்களின் பொக்கிஷமே குழந்தைகள்தான்..! அவர்கள் இல்லாத உலகத்தில் நாம் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?!சற்று சிந்தியுங்கள்..!

-ஆர்.சிராசுதீன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply