திமுகவில் ஐக்கியமாகி வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்..!

இராமநாதபுரம், தேனி, வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிப்ரவரி 09 அன்று காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், திமுக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல் தலைமையில், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் எஸ்.முருகானந்தம், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் கே.பசுமலை, கடலாடி ஒன்றியச் செயலாளர் எம்.முத்துராஜ், பரமக்குடி ஒன்றியச் செயலாளர் கே.ஜி.கருப்பையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஏ.சுப்பு, திருப்புல்லாணி ஒன்றிய மகளிர்அணிச் செயலாளர் கே.முனியம்மாள், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.சம்பத், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பொன்ராக்கு, பரமக்குடி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அமிர்தவள்ளி, மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் பி.ஆனந்த்ராஜ், பரமக்குடி ஒன்றிய இணைச் செயலாளர் ஏ.அழகுமலை, இராமநாதபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் கே.ஸ்டாலின், போகலூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜி.அலெக்ஸ், திருப்புல்லாணி ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலளர் தினேஸ், இராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் பொன்மனசெல்வம், மாவட்ட நெசவாளர் அணி இணைச் செயலாளர் கிரி நாகராஜ், பரமக்குடி நகர மகளிர் அணி இணைச் செயலாளர் என்.நாகஜோதி, ஏர்வாடி நகரச் செயலாளர் பசீர்அகமது, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியச் செயலாளர் மணிமாறன், நயினார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.தாமோதரன், கடலாடி ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் ஏ.காதர்சுல்தான், மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் கே.செல்வேஸ்வரன், ஏர்வாடி நகர இணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், கிளைச் செயலாளர்கள் எஸ்.காவனூர் சி.பாண்டி, சரவணன், நிஷாந்த், ஹரிதாஸ், சின்ன ஏர்வாடி ஆர்.பிரபாகரன், அச்சடிபிரம்பு பஞ்சவர்ணம், சடையன்முனியன்வலசை எஸ்நம்புகுமார், பால்கரை எஸ்.கந்தவேல், வேளானூர் முனியம்மாள், களரிகிழக்கு சுகிதா உள்ளிட்ட 95-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்; தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ் தலைமையில் போடி நகர இளைஞர் அணிச் செயலாளர் ராஜ்குமார், உத்தமபாளையம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் மாரிசெல்வம், தேனி நகர இளைஞர் அணிச் செயலாளர் நாகலிங்கம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய செயற்குழு கே.பி.லெட்சுமணபெருமாள், ஒன்றிய இணைச் செயலாளர் பி.சவுடையன், ஒன்றிய வர்த்தகர் அணி செயலாளர் ஆர்.சுரேஷ், ஒன்றிய செயற்குழு ஏ.சுப்பையா, ஒன்றிய இணைச் செயலாளர் எம்.முருகன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் வி.பாண்டியன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கே.காமாட்சி, ஒன்றிய இளைஞர் அணி செயற்குழு கே.சுப்பையா, ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.வினோத், ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர் கே.பிரபு, ஒன்றிய விவசாய அணி இணைச் செயலளார் வி.வீரக்குமார், ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் எஸ்.பரமசிவம், ஒன்றிய விவசாய அணி செயகுழு எம்.மல்லைச்சாமி, செயற்குழு டி.காசிமாயன், விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.ராஜன், தேனி நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.திருமாண்டி, செயற்குழு ஆர்.கே.சுப்பிரமணி, கே.பால்பாண்டி, போடி நகர இளைஞர் அணிச் செயலாளர் எம்.ராஜ்குமார், தேனி நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் அருள்பாண்டி, உத்தமபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எம்.பிரபாகரன், எம்.அசோக்குமார், எஸ்.ஸ்டாலின், செயற்குழு ஆர்.விஜய், பேரூர் இளைஞர் அணிச் செயலாளர் வி.சுந்தரம், பேரூர் இணைச் செயலாளர்பி.செல்வகுமார், இளைஞர் அணிச் செயலாளர் கே.கரண், செயற்குழு எஸ்.தீபன், இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.முனிராஜ், செயற்குழு பொறுப்பாளர் எஸ்.தினேஷ், இளைஞர் அணி துணைச் செயலாளர் பி.மனோஜ்குமார், விவசாய அணி செயலாளர் எம்.மகேந்திரன், ஒன்றிய இணைச் செயலாளர் எஸ்.முருகன், துணைச் செயலாளர் எஸ்.சுந்தரராஜன், செயற்குழு கே.பாப்பா, எஸ்.சுருளிஅம்மாள், மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.காளிஸ்வரி, செயற்குழு இ.பூங்கொடி, இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.சின்னமாரிச்சாமி, வர்த்தக அணிச் செயலாளர் ஏ.ஈஸ்வரன், வர்த்தக அணி இணைச் செயலாளர் இ.சுப்பு, மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.ராஜலட்சுமி, இளைஞர் அணி இணைச் செயலாளர் இ.மாரிச்சாமி, பேரூர் மகளிர் அணிச்செயலாளர் யுவஸ்ரீ, பேரூர் மகளிர் அணி இணைச் செயலாளர்கள் என்.தனுஷ், ஏ.சுருதி, பேரூர் மகளிர் அணி துணைச் செயலாளர் ஏ.சங்கிலி, தேனி நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் டி.நாகலிங்கம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்; வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்; தென்சென்னை மாவட்டம், வட்டச் செயலாளர் இ.முத்துராஜ் தலைமையில் வட்டச் செயலாளர் எம்.இராஜேஸ்வரி, எம்.எல்.இராஜேஸ்வரி, எம்.எல்.ரூபன்ஜெரேமியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்; திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஏ.சுந்தரி தலைமையில் விருகை பகுதிஇ 138-வது வட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மகளிர் அணியினரும் தி.மு.க.வில் இணைந்தனர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply