ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியது எப்படி?-அதற்கு யார் காரணம்?!-அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக் காலத்தில் (மே 2011 முதல் 15 செப்டம்பர் 2016 வரை), தமிழ்நாட்டில் ஆட்சி மற்றும் அரசியல் ரீதியாக தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை நடந்திருக்குமேயானால், அதற்கு முக்கிய பங்காற்றியவர் நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள்தான்!

பணத்திற்காகவும், பதவிக்காகவும் மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் ‘துக்ளக்’ ஆசிரியர் நடிகர் சோ உள்பட அத்தனை பேர்களும் ஜெ.ஜெயலலிதா அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடந்தபோதும், புரட்சித் தலைவி, நிரந்தரப் பொதுச் செயலாளர், நிரந்தர முதலமைச்சர்..! என்று, விண்ணை முட்டும் வாழ்த்துக்கோஷங்களை ஏழுப்பி ஜெ.ஜெயலலிதா அவர்களை வணங்கி உலகமே மகிழ்வித்து கொண்டிருந்த அந்த காலக்கட்டத்திலும், பணம், பதவி இப்படி எந்த சலனங்களுக்கும் ஆட்படாமல், ‘அம்மா’ என்ற வார்த்தையை கூட அடைமொழியாக பயன்படுத்தாமல், 20 ஆயிரம் பக்கங்களுக்குமேல் ஜெ.ஜெயலலிதா அவர்களோடு, கடிதத் தொடர்பில் இருந்த உலகில் ஒரே மனிதர் யார் என்றால், அது நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள்தான்!

ஜெ.ஜெயலலிதா அவர்களோடு கடிதத் தொடர்பில் இருந்தார் என்பதைவிட, அவரது ஆட்சி மற்றும் அரசு நிர்வாகத்தில் நடைப்பெற்ற குற்றம், குறைகளை உடனுக்குடன் துணிச்சலாக சுட்டிக் காட்டி அதற்கு தீர்வும் சொன்னவர் நமது உள்ளாட்சித் தகவல், ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள்தான்! அத்தகையக் கடிதங்களில் ஒன்றுதான் கீழ்காணும் கடிதம்.

இது ஜெ.ஜெயலலிதா அவர்கள் கொடைநாடு எஸ்டேட்டில் ஓய்வில் இருந்தபோது, கொடைநாடு எஸ்டேட் முகவரிக்கே அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கடிதம்.

File Photo

யார் இந்த துரைபெஞ்சமின்?!-கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யுங்கள்…!

https://www.tamilcnn.lk/archives/593119.html

https://tamil.webdunia.com/article/regional-tamil-news/amma-makkal-munnetra-sangam-in-tamil-nadu-117011600006_1.html

-தொகுப்பு: கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply