வங்கதேசத்தில் பிரதமர் நரேந்திர மோதிக்கு 19 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது!

Prime Minister Shri Narendra Modi arrived in Dhaka for his visit to Bangladesh at the invitation of Prime Minister Sheikh Hasina. This is the historic visit to celebrate Mujib Borsho- the birth centenary of Sheikh Mujibur Rahman ; 50 years of the establishment of diplomatic ties between India and Bangladesh; and 50 years of Bangladesh’s war of liberation.

In a special gesture, Prime Minister Sheikh Hasina and Ministers from her cabinet welcomed Prime Minister Modi at the Hazrat Shahjalal International Airport.

A salute of 19 guns and Guard of honour were accorded to Prime Minister Shri Narendra Modi.

visited the National Martyrs’ Memorial (JatiyoSritiShoudho), the National monument of Bangladesh to pay tributes to the valour and the sacrifice of those who gave their lives in the Bangladesh Liberation War of 1971. The monument is located in Savar, about 35 km north-west of  Dhaka and was designed by Syed Mainul Hossain.

Prime Minister also planted sapling of Arjun tree at the memorial premises and signed the visitor’s book in the monument. He wrote – “I pray that the eternal flame at Savar remains a lasting reminder of the noble victory of truth and courage over deceit and oppression.”

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோதி இன்று டாக்கா சென்றடைந்தார். ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளான முஜிப் போரஷோ; இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு; வங்கதேசத்தின் விடுதலைக்கான போரின் 50-வது ஆண்டு ஆகியவற்றை குறிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க பயணம் இதுவாகும்.

சிறப்பு மரியாதையாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோதிக்கு ஹஸரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோதிக்கு 19 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

வங்கதேசத்துக்கு சென்றடைந்ததும் 1971-ம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செலுத்துவதற்காக தேசிய போர்வீரர்கள் நினைவிடத்துக்கு (ஜதியோஸ்ரீதிஷவ்டோ) பிரதமர் நரேந்திர மோதி சென்றார்.

இந்த நினைவிடம், தலைநகர் டாக்காவுக்கு வடமேற்கே 35 கி.மீ தொலைவில் சாவர் என்ற இடத்தில் உள்ளது. இதை சையத் மைனுல் ஹூசைன் என்பவர் வடிவமைத்தார்.

நினைவிட வளாகத்தில் மருத மரக்கன்றையும் பிரதமர் நட்டு, பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். ‘‘

சாவர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு, உண்மையின் உன்னத வெற்றியின் நீடித்த நினைவூட்டலாகவும், வஞ்சம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தைரியமாகவும் விளங்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்’’ என, பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோதி எழுதினார்.

Prime Minister Shri Narendra Modi, as part of his two-day visit to Bangladesh met Political leaders from 14 Party Alliance along with the Convener. Discussions centred on diverse issues of bilateral relations were held during the meeting to strengthen ties between the two nations.

தமது இரண்டு நாள் வங்கதேச பயணத்தின் ஒரு பகுதியாக, 14 கட்சி கூட்டணியின் தலைவர்களையும் அதன் ஒருங்கிணைப்பாளரையும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அங்குள்ள எதிர்கட்சி தலைவர்கள் பலரை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

Met the Community leaders including Representatives of Minorities in Bangladesh, Bangladeshi Mukhtijoddhas, Friends of India and Youth Icons.

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பிரதிநிதிகள், வங்கதேச முக்திஜோதாஸ், பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அண்ட் யூத் ஐகான்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சமூகத் தலைவர்களையும், பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply