அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 77 சட்டமன்றத் தொகுதிகளில், 21,825 வாக்குச் சாவடிகளில் முதல் கட்ட வாக்கு பதிவு அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டது என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, 10,288 வாக்குச் சாவடிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட வாக்கு பதிவில் 74 லட்சம் வாக்காளர்களும், அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, 11,537 வாக்குச் சாவடிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட வாக்கு பதிவில் 81 லட்சம் வாக்காளர்களும், தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர்.
வழக்கமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று இருந்த நடைமுறையை, கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு 1,000 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதி முதல், முதல் கட்ட வாக்கு பதிவு நடைப்பெற்ற நாள் வரை, இரு மாநிலங்கங்களிலும் 281.28 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 183.97 கோடியும், அசாமில் 97.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் 60.91 கோடி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தோடு ஒப்பிடுகையில், இது நான்கு மடங்கு அதிகம் என்பது அதிர்ச்சித் தரும் தகவலாக உள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com