ஓட்டுக்கு காவல்துறையினர் மூலம் பணம் பட்டுவாடா!-திருச்சியில் மட்டும்தான் நடந்ததா?!- தமிழகம் முழுவதும் இதே நிலைதானா?! -விசாரணை முடியும்வரை தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.

மக்களின் வரிப் பணத்தில் மாதந்தோறும் சம்பளம் வாங்கிக்கொண்டு, தனிப்பட்ட ஆதாயத்திற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்காக, வாக்கு சேகரிக்கும் பணியிலும், ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்யும் வேலையிலும் காவல்துறை அதிகாரிகளே நேரடியாக களமிறங்கி, கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கிறது.

நிலைய அதிகாரிகளின் அனுமதி மற்றும் ஆதரவு இல்லாமல், காவல் நிலையங்களில் வைத்தே கவர்களில் பணம் வினியோகம் செய்ய முடியுமா?! ‘பழத்தை தின்னவர்களை தப்பிக்க விட்டு விட்டு; தோலை மட்டும் தின்னவர்களை தண்டிப்பது என்ன நியாயம்?! ‘மாட்டிக் கொண்டவன் திருடன்; ஓடிப்போனவன் உத்தமன்’ என்ற கதையாகதான் இருக்கிறது இவர்களின் நடவடிக்கை.

இச்சம்பவம் திருச்சியில் மட்டும்தான் நடந்ததா?!- இல்லை தமிழகம் முழுவதும் இதே நிலைதானா?! என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

எனவே, இதுத்தொடர்பான விசாரணையை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். இந்த விசாரணையின் முடிவு முழுமையாக வெளிவரும் வரை, தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply