நக்சலைட்டுகள் பிடியில் சிக்கியுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்!-தந்தைக்காக பிராத்தனை செய்யும் அவரது மகள்!-காவல் தெய்வங்கள் (CRPF) மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய (நக்சலைட்) காட்டுமிராண்டிகள்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாபூர், சுக்மா காட்டுப்பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) நக்சலைட் கிளர்ச்சியாளர்களை தேடும் பணியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி ஜொனகுடா கிராமத்திற்கு அருகிலுள்ள சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஹித்மா என்ற மாவோயிஸ்டு தலைவரை தேடி காட்டுக்குள் நுழைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை, நவீன ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 800 பேர்களைக் கொண்ட ‘நக்சலைட்’ கும்பல் ஒன்று சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை சேர்ந்த 24 வீரர்கள் பலியானார்கள். பலபேர் காயமடைந்தனர். மேலும், ஒரு வீரரின் நிலை என்ன ஆயிற்று என்றே இதுவரை தெரியவில்லை.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை தாக்கியதில் மாவோயிஸ்டுகள் தரப்பில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை மாவோயிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மாவோயிஸ்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தண்டகரன்யா சிறப்பு மண்டல கமிட்டியின் (பிஎல்ஜிஏ) செய்தித் தொடர்பாளர் விகல்ப் என்பவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தங்கள் தரப்பில் நான்கு சகாக்கள் பலியாகி உள்ளதாகவும், அதில் ஒரு பெண் போராளியின் உடலை திரும்பப் பெற இயலவில்லை என்றும், தாக்குதலில் உயிரிழந்த ஒரு கிராமவாசி உள்பட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிஜாபூர், சுக்மா மாவட்டங்களுக்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நுழைய முற்பட்டபோது, எதிர் தாக்குதல் நடத்த நேர்ந்ததாகவும், மாவோயிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் அதிகமான கிராமவாசிகள் கொல்லப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படையினருக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் தாக்குதலின் தொடர்ச்சியாக சமீபத்திய தாக்குதல் நடந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) கோப்ரா படையணியைச் சேர்ந்த ராஜேஸ்வர் சிங் என்ற வீரர் தங்கள் வசம் இருப்பதாகவும், அரசு ‘மத்தியஸ்தர்’ பெயரை அனுப்பி வைத்தால், அவர்களிடம் அந்த வீரரை ஒப்படைப்போம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் குல்தீப் சிங்.

இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் குல்தீப் சிங், ஐந்து பட்டாலியன்கள் புதிதாக களமிறக்கப்பட்டதும், பஸகுடா, சில்கர், ஜகர்குண்டா மற்றும் மின்பா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புதிய முகாம்கள் நக்சல்களை வெறுப்படைய செய்துள்ளதாகவும், அதன் விளைவாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதன் மூலம் பாதுகாப்பு படையினரை பயமுறுத்தி விடலாம் என அவர்கள் கருதுவதாகவும், என்ன நடந்தாலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து முன்னேறி கொண்டே இருப்பார்கள் அது நிச்சயம் என்றார்.

மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் தற்போது காணாமல் போயிருப்பதால் அவர் மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக சந்தேகப்படுகிறோம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். காணாமல் போன வீரரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளோம். மேலும், நக்சலைட்டுகளை தேடும் பணியில் சுமார் 1500 வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நக்சலைட்டுகள் பிடியில் சிக்கியுள்ள மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ராஜேஸ்வர் சிங்.

தந்தைக்காக பிராத்தனை செய்யும் ராஜேஸ்வர் சிங்கின் மகள் மற்றும் அவரது குடும்ப உறவுகள்.

இந்நிலையில், நக்சலைட்டுகள் பிடியில் சிக்கியுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ராஜேஸ்வர் சிங்கின் குடும்ப உறவுகளும், அவரது ஊர் மக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தந்தைக்காக அவரது மகள் பிராத்தனை செய்வதைப் பார்க்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

மத்திய ரிசர்வ் காவல் படை என்றால் என்ன?-அவர்களின் பணி என்ன?!

இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை உள்ளன. இவை ராணுவ அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படுபவை. இந்திய குடியரசுத் தலைவர் இந்த முப்படைக்கும் தலைவராக இருந்து வருகிறார்.

இராணுவத்தில் இருந்து சி.ஆர்.பி.எஃப் -Central Reserve Police Force (CRPF) என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேறுபடுகிறார்கள். சி.ஆர்.பி.எஃப். 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரச பிரதிநிதிக் காவலர் (Crown Representative’s Police) என்ற படையை 1939 ஜூலை 27ல் இரண்டு பட்டாலியன்களுடன் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டது.

தொடக்கத்தில் இதன் முக்கியப் பணியாதெனில் அரச குடும்ப சொத்துக்களை போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தப்பிறகு, 1949-ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய சேமக் காவல் படை என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960-களில் இதர மாநிலப்படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.

இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இதில் பணி புரிகின்றனர். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுதான் இதன் முக்கிய பணி.

நக்ஸல்கள், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இவர்கள்தான். 1965-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் எல்லையையும் இவர்கள்தான் பாதுகாத்தனர். எல்லை பாதுகாப்புப் படை தனியாக உருவாக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் வசம் பாகிஸ்தான் எல்லை ஒப்படைக்கப்பட்டது.

2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் 5 தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியதும் இவர்கள்தான்.

ஐ.நா அமைதிப்படைக்கும் இந்தியா சார்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்தான் பெரும்பாலும் அனுப்பப்படுவார்கள்.

சி.ஆர்.பி.எஃப் போன்று நம் நாட்டில் பல பாதுகாப்பு அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply