“நக்சலைட்டுகள் பிடியில் சிக்கியுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்!-தந்தைக்காக பிராத்தனை செய்யும் அவரது மகள்!-காவல் தெய்வங்கள் (CRPF) மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய (நக்சலைட்) காட்டுமிராண்டிகள்..!”
– என்ற தலைப்பில் சத்தீஸ்கர் மாநிலம், பிஜாபூர், சுக்மா காட்டுப்பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) நக்சலைட் கிளர்ச்சியாளர்களுக்கும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் நடைப்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து, ஆதாரப்பூர்வமானச் செய்திகளை படங்கள் மற்றும் வீடியோ ஆதாரத்தோடு நேற்று (07.04.2021) இரவு 9.52 மணிக்கு, நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய மத்தியத்தர் குழு, நக்சலைட் கிளர்ச்சியாளர்களை இன்று நேரில் சந்தித்தது, அதன் பிறகு, நக்சலைட்டுகள் பிடியில் சிக்கியிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ராகேஸ்வர் சிங்கை, மாவோயிஸ்ட் தீவிரவாத கும்பல் இன்று (08.04.2021) மாலை விடுவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட ராகேஷ்வர் சிங் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
நக்சலைட்டுகள் முற்றிலுமாக ஒழிக்க பட வேண்டும்…. இந்தி ராணுவம் என்ன செய்கிறது… இந்த செயல் எந்த ஒரு இந்தியனுக்கு பாதுகாப்பு இந்தியாவில் இல்லை என்பதை சுட்டி காட்டுகிறது..,.
கண்டதுக்குறியது……