ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில், 2,146 மீட்டர் உயரத்தில், காஷ்மீர் சமவெளி தெற்கில், ஸ்ரீநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும், புல்வாமாவிலிருந்து 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள சோபியான் மாவட்டத்தில், அவந்திபோராவின் நோபக் மற்றும் டிரால் பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் – Ansar Ghazwat-ul-Hind (AGuH) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் இம்தியாஸ் ஷா என்பவர் உள்பட ஏழு பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நேற்று (08.04.2021) நண்பகல் தொடங்கி இன்று (09.04.2021) காலை 7:30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com