ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா வழக்கில், முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சந்தித்த சவால்கள்…!-அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…!

முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா (File Photo)

மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI)  முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கொரோனா தொற்றுக் காரணமாக இன்று (16.04.2021) அதிகாலை உயிரிழந்தார். 68 வயதான ரஞ்சித் சின்ஹா, 1974 ஆம் ஆண்டின் பீகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை ரஞ்சித் சின்ஹா விசாரித்துள்ளார். அவற்றில் மிக, மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றுதான் ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா வழக்கு.

இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகராக செயல்பட்டு, ஊழல் புரிந்ததாக கைது செய்யப்பட்ட ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா மற்றும் ருமேனியா நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி அன்சியா நியாஸ்குவும் இவ்வழக்கில் முக்கியமானவர்கள்.

இவ்வழக்கில் அப்போது சிபிஐ இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா, பல்வேறு அரசியல் நிர்பந்தங்களையும்; நெருக்கடிகளையும்; தர்ம சங்கடங்களையும் சந்தித்தார். அந்த சவால்களுக்கு காரணமாக இருந்த ஆவணங்களை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம். ஏனென்றால், வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்!

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா (File Photo)

dokumen.tips_letter-to-ranjit-sinha-cbi-director-july-1-2013-fir-against-ramnish-with-annex

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply