ICSE-10-ம் வகுப்பு மற்றும்12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்!

CISCE CEO, GERRY ARATHOON.

நாடு முழுவதும் கொரோனா (COVID-19) தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS CISCE) 10 மற்றும் 12 வகுப்புகளின் வாரியத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

அதன் படி, மே 4-ந் தேதி முதல் நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா (COVID-19) தொற்று நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேர்வு நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS CISCE) தலைமை நிர்வாகியும், செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply