எதை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள்!-முழு நேர பொது முடக்கத்தை (Lockdown) மட்டும் அறிவித்து விடாதீர்கள்..!

உலகம் முழுவதும் ‘கொரோனா’ இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இவற்றின் தாக்கம் இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் மேற்காணும் மாநிலங்களில் மட்டும் 78.56 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,123 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,334 பேரும், தில்லியில் 24,375 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,501 பேர் ‘கொரோனா’ பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும்; தற்போது மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்; அடுத்து என்ன செய்ய வேண்டும்?! என்பது குறித்தும், உயர் அதிகாரிகளுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் ஆலோசகர் க.சண்முகம், சுகாதார செயலாளர் Dr.ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் Dr.டி.ஜெகன்நாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

எதை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள்…! -ஆனால், முழு நேர பொது முடக்கத்தை (Lockdown) மட்டும் அறிவித்து விடாதீர்கள் என்பதுதான் நாடு முழுவதும் உள்ள மக்களின் இன்றைய வேண்டுகோளாக உள்ளது.

ஏனென்றால், கொரோனாவை விட கொடுமையானது பசி! அதை தாக்குப் பிடிக்கும் சக்தி ஏழை, எளிய, சாமானிய மக்களிடம் தற்போது இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply