கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்ல இந்திய ரயில்வே நிர்வாகம் களமிறங்கியுள்ளது. திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை எடுத்துச் செல்லும் பணியை ரயில்வே தொடங்கியுள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து காலி டேங்கர் லாரிகளை விசாகப்பட்டினம், ஜம்ஷெட்பூர், ரூர்கேலா, பகோரா ஆகிய இடங்களுக்கு ஏற்றிச் சென்று, அங்கிருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜனை நிரப்பி வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டேங்கர் லாரிகளை சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் ஏற்றி, இறக்குவதற்கான வசதிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும்.
-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com