Prime Minister Narendra Modi chaired high-level meeting on Covid-19 situation with Chief Ministers of 11 states and Union Territories which have reported maximum number of cases in recently.
Noting that the virus is affecting several states as well as Tier 2 and Tier 3 cities at once, PM Modi called for working together to fight the pandemic with collective power. He said the biggest basis of India’s success during the first wave of the pandemic was our united efforts and united strategy and reiterated that we will have to address this challenge in the same way.
PM Modi assured Centre’s full support to all the states and in this fight. He added that the Ministry of Health is also in touch with the states and is monitoring the situation closely and issuing necessary advices to the states from time to time.
On oxygen supply, PM Modi took note of the points raised by the states. He said there is a continuous effort to increase oxygen supply. All the concerned departments and ministries of the government are also working together. Industrial oxygen has also been diverted to meet immediate requirements.
PM Modi urged all states to work together and coordinate with one-another to fulfil requirements relating to medicines and oxygen. He urged the states to check hoarding and black marketing of oxygen and medicines. The PM said that every state should ensure that no oxygen tanker, whether it is meant for any state, is stopped or gets stranded. The Prime Minister urged the states to set up a high-level co-ordination committee to carry oxygen to different hospitals of the state. This Coordination Committee should ensure that as soon as there is allotment of oxygen from the centre, it can deliver oxygen as per requirement in different hospitals of the state immediately. PM informed the Chief Ministers that yesterday he chaired a meeting on oxygen supply and will be attending one today to discuss all the options for increasing the oxygen supply.
PM Modi stated that the central government is working on all possible options to reduce the travel time and turnaround time of oxygen tankers. For this, Railways has started Oxygen Express.Empty Oxygen tankers are also being transported by the Air-Force to reduce one way travel time.
The Prime Minister said that along with upgrading of resources, we have to focus on testing. He emphasized that widespread testing should be conducted so that people get the facility easily.
The PM remarked that our vaccination programme should not slow down in this situation. PM Modi mentioned that India is running the world’s largest vaccination programme and so far, more than 15 crore vaccine doses have been provided free of cost to the states by the Government of India. The campaign launched by the Central Government to provide free vaccine to all citizens above 45 years as well has Health-Care workers & Front-Line workers, will also continue in the same manner. From May 1, PM Modi added, the vaccine is going to be available to all citizens above 18 years of age. We will also need to work in mission mode to get more and more people vaccinated.
PM Modi said along with all measures for treatment of the patients, hospital safety is also very important. Expressing grief on recent incidents of oxygen leakage and fire at hospitals, PM Modi said the administrative staff of the hospital needs to be made more aware about the safety protocols.
PM Modi also urged the administration to continuously make people aware so that they do not indulge in panic buying. He said that with united efforts, we will be able to stop this second wave of the pandemic across the country.
Earlier, a presentation was given by Dr VK Paul, which highlighted the preparations being done to counter the new surge of infections. Dr Paul also presented the roadmap for increasing the medical facilities and targeted treatment of patients. He briefed everyone about Boosting of Medical infrastructure, teams and supplies; Clinical Management; Containment; Vaccination & Community engagement.
During the interaction, Chief Ministers of states briefed the PM about the steps being taken by respective State Governments in the current wave. They also noted that the directions given by the PM and the road map presented by NITI would help them plan their responses in a better way.
xxxxxxxxxxxxxx
சமீபத்தில் கொரோனா (Covid-19) பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கொரோனா (Covid-19) நிலவரம் குறித்த உயர்நிலைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்கினார்.
பல மாநிலங்கள் மற்றும் 2-ம் நிலை மற்றும் 3 -ம் நிலை நகரங்களில் தொற்று பாதிப்பை குறிப்பிட்ட பிரதமர், கூட்டு சக்தியுடன் தொற்றை எதிர்த்து போராட அழைப்பு விடுத்தார்.
தொற்றின் முதலாவது அலையின் போது, இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய அடிப்படையாக இருந்தது நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் யுக்திகள் என அவர் கூறினார். அதேபோல், இந்த சவாலையும் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு முழு ஆதரவை அளிக்கும் என பிரதமர் மோதி உறுதி அளித்தார். சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும், மாநிலங்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் விநியோகம் பற்றி, மாநிலங்கள் தெரிவித்த விஷயங்களை பிரதமர் மோதி குறித்துக் கொண்டார். ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இணைந்து செயல்படுகின்றன.
தொழிற்சாலை ஆக்ஸிஜன்களும், அவசர தேவையை எதிர்கொள்ள மாற்றிவிடப்படுகின்றன.மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான தேவைகளை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்.
ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பதுக்கப்படுகிறதா? கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறதா? என்பதை மாநிலங்கள் சோதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளும், தடுத்து நிறுத்தப்படக்கூடாது என்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பல மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல, உயர்நிலை ஒழுங்கிணைப்பு குழுவை உருவாக்க வேண்டும் என மாநிலங்களை பிரதமர் வலியுறுத்தினார். மத்திய அரசின் ஒதுக்கீடு கிடைத்ததும், இந்த ஒருங்கிணைப்பு குழு, மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப உடனடியாக அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆக்ஸிஜன் விநியோகம் செய்பவர்களுடன் நேற்று ஒரு கூட்டத்துக்கு தாம் தலைமை தாங்கியதாகவும், ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க இன்றும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளின் பயண நேரத்தை குறைக்க முடிந்த அளவு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். இதற்காக, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே தொடங்கியுள்ளது. காலி ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லும் பயண நேரத்தை குறைக்க, விமானப்படை விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
வளங்களை மேம்படுத்துவதுடன், பரிசோதனையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். மக்களுக்கு எளிதில் கிடைக்கும் விதத்தில் கொரோனா (Covid-19) பரிசோதனை அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில், நமது தடுப்பூசி திட்டம், தாமதமாகக் கூடாது என பிரதமர் குறிப்பிட்டார். உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோதி குறிப்பிட்டார். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க தொடங்கப்பட்ட பிரச்சாரம் அதே வழியில் தொடர்கிறது. மே 1-ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
அதிகளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, நாம் திட்ட இலக்குடன் செயல்படுத்துவது அவசியம்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதுடன், மருத்துவமனைகளின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
சமீபத்தில் நடந்த ஆக்ஸிஜன் கசிவு, மருத்துவமனைகளில் நடந்த தீ விபத்து சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்காத வகையில், நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கொரோனா (Covid-19) தொற்றின் இரண்டாவது அலையையும், நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என அவர் கூறினார்.
இந்த கூட்டத்துக்கு முன்பாக, புதிய தொற்று பாதிப்பை எதிர்கொள்ள செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து டாக்டர் வி.கே.பால் விளக்கினார். மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அதிகரிக்கும் திட்டத்தை டாக்டர் பால் விளக்கினார். மருத்துவ கட்டமைப்புகள், குழுக்கள் மற்றும் விநியோகங்கள், மருத்துவ மேலாண்மை, கட்டுப்பாடு, தடுப்பூசி போடுதல் ஆகியவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த கலந்துரையாடலின்போது, தற்போதைய 2-ம் அலையில் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பிரதமரிடம், மாநில முதல்வர்கள் விளக்கினார்கள். பிரதமர் பிறப்பித்த உத்தரவுகள், ‘நிதி’ அமைப்பு தெரிவித்த திட்டங்கள் ஆகிய நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட உதவும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com