திருச்சி, காட்டூர்- பாப்பா குறிச்சியில் குடிநீர் குழாய் பாராமரிப்பு மற்றும் அடைப்பு சரிசெய்யும் பணி நடைப்பெற்றது.

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி அருந்ததியர் தெருவில் கடந்த மூன்று மாத காலமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, திருச்சி மாநகராட்சி ஆணையரது காரை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தனர். இதையறிந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன் மாற்றுப்பாதையில் சென்றதால், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டூர் – பாப்பா குறிச்சி சாலையில் காலி குடங்களுடன், விறகுகளை போட்டு 21.04.2021 அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுக்குறித்து ‘குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!-திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சியில் நடந்த போராட்டம்.’- என்ற தலைப்பில், நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் 21.04.2021 அன்று படங்கள் மற்றும் வீடியோ ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், திருச்சி காட்டூர் – பாப்பா குறிச்சியில் குடிநீர் குழாய் பாராமரிப்பு மற்றும் அடைப்பு சரிசெய்யும் பணி, திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று நடைப்பெற்றது. இனி இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு இருக்காது என்று திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

-ஆர்.சிராசுதீன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத் தொடர்பான முந்தையச் செய்திக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/04/21/56074/

Leave a Reply