இந்தியாவின் ‘முதல் குடிமகன்’ என்று கருதப்படும் குடியரசு தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட, ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் (All India Institute of Medical Sciences) தங்கி சிகிச்சை பெறுவார்கள். இதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் உண்டு.
நிலமை இப்படி இருக்கும்போது, நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்காக, டெல்லி, சாணக்யபுரியில் உள்ள அசோகா சொகுசு ஆடம்பர ஹோட்டலில் 100 அறைகளை ஒதுக்கி, அதை மருத்துவ வசதிகளுடன் கொரோனா சிகிச்சை படுக்கைகளாக மாற்றி, பணத்தையும், நேரத்தையும் விரையமாக்கியுள்ளனர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆட்சியாளர்கள்.
இத்தனை கோமாளித்தனமும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் தலைமையில்தான் அரங்கேறியுள்ளது.
டெல்லி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, நாட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை, சற்று தாமதமாக புரிந்துக் கொண்ட நீதிபதிகள்; கொரோனா சிகிச்சை பெறுவதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் நாங்கள் அறைகள் கேட்கவில்லை என, வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், வேறு வழியில்லாமல் டெல்லி அசோகா சொகுசு ஆடம்பர ஹோட்டலில் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கொரோனா சிகிச்சை என்ற அந்த உத்தரவை, டெல்லி அரசாங்கம் அவசர, அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது.
நீதித்துறையில் பணியாற்றும் அனைவரும், நம் சக குடும்பத்தில் இருந்து சென்றவர்கள்தான் என்ற புரிதல் கூட இல்லாமல், அவர்கள் என்னமோ வானத்தில் இருந்து இறங்கி வந்த ‘தேவதூதர்கள்’ என்பதைப் போல மிகைப்படுத்தி காட்ட டெல்லி அரசாங்கம் முயற்ச்சித்திருப்பது, ‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’ என்ற நீதித்துறையின் கோட்பாட்டை சாகடிக்கும் முயற்சியாகும்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Yes….