கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், நாடு தழுவிய ஒரு யுக்தியை, மத்திய அரசு வகுக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய நேரம் இது. புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தைப் போக்க வேண்டும். இந்த நெருக்கடி நிலை சீராகும் வரை, அவர்களின் வங்கி கணக்குகளில், குறைந்தபட்சம், 6,000 ரூபாய், ‘டிபாசிட்’ செய்யப்பட வேண்டும்.
கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில், ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும். இதை செய்தால் மட்டுமே, மக்களை நாம் காப்பாற்ற முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது காணொலி காட்சியில் தெரிவித்துள்ளார்.
–எஸ்.சதிஸ் சர்மா.