ஒன்றியம் என்ற வார்த்தையில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது!-சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.

ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல. சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதைதான் சொல்லி இருக்கிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல.

ஒன்றிய அரசு என கூறுவதை கண்டு யாரும் மிரள வேண்டாம். 1957-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் வரியில் ஒன்றியம் என்ற வார்த்தை உள்ளது. மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என பொருள். ஒன்றியம் என்ற வார்த்தையில்தான் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். பயன்படுத்துவோம். பயன்படுத்தி கொண்டே இருப்போம்.

இவ்வாறு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply