காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police verification certificate) வழங்குவதில் கால தாமதம்!-அரசு வேலைக்கு விண்ணப்பம் அனுப்ப முடியாமல் ஆயிரக்கணக்கானோர் அவதி!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை திருக்கோயில்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் மற்றும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட உப கோயில்களில் காலியாக உள்ள மேற்காணும் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பை திருக்கோயில்கள் நிர்வாகம் 06.07.2021 அன்று வெளியிட்டது. அதில் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.08.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு சேர்த்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பட்டியலில் காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police verification certificate) மிக முக்கியமானது ஆகும்.

இதற்காக தமிழ்நாடு காவல் துறை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரூ.500 கட்டணம் செலுத்தி, ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இணையதளத்தின் செயல்பாடு அடிக்கடி தாமதமும், தடங்களும் ஏற்பட்டது.

மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததால், அதை சரிபார்த்து சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police verification certificate) கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பூர்த்திச் செய்யப்பட்ட வேலைக்காண விண்ணப்பத்தை உரிய தேதிக்குள் அனுப்ப முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் (அல்லது) நேர்முக தேர்வுக்கு வரும்போது காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police verification certificate) கொண்டு வர அனுமதிக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த உயரதிகாரிகள் உடனே வெளியிட வேண்டும். அப்போது தான்
விண்ணப்பதாரர்கள் நிம்மதி அடைவார்கள்
.

-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply