நிதி நிலை அறிக்கையை புறக்கணித்து வெளி நடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌கள் அவசர ஆலோசனை!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய தொடங்கியதும், மைக் கொடுக்க சொல்லி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்களை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

ஆனால், அதை ஏற்காத அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிதி நிலை அறிக்கையை புறக்கணித்து அங்கிருந்து வெளி நடப்பு செய்தனர்.

இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று (13.08.2021) மாலை 4.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்‌ சாலையில்‌ உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்‌, நடைபெற்றது.

தமிழக மக்களுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், தமிழக மக்களை வஞ்சித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை, சட்டசபையில் எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து இக்கூட்டத்தில் லோசிக்கப்பட்டது.

கே.பி.சுகுமார், எஸ்.திவ்யா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply