பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 114 வீடுகளை காணவில்லை!-கண்டுபிடிக்குபடி காவல்துறையில் புகார்.

ஜெ.மோகன்ராஜ், பொதுச் செயலாளர், ஜெபமணி ஜனதா கட்சி.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், நாகக்குடையான் பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 114 வீடுகள் காணாமல் போய்விட்டதாகவும், அதை கண்டுபிடிக்குபடி ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.மோகன்ராஜ் என்பவர், நாகப்பட்டினம் மாவட்டம், காரியாபட்டினம் காவல் நிலையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

திரைப்படத்தில் நடிகர் வடிவேல் ”கிணற்றைக் காணவில்லை” என்று போலிசில் புகார் கொடுத்ததை நாமெல்லாம் நகைச்சுவையாக ரசித்தோம்.

ஆனால், இந்த புகாரைப் பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது; வீடு கட்டாமலேயே கட்டியதாக பணத்தை மோசடி செய்திருப்பது உண்மையிலுமே அதிர்ச்சி அளிக்கிறது.

இதுப்போன்ற மோசடிகள் இங்குமட்டும்தான் நடந்துள்ளதா?! (அல்லது) இந்தியா முழுவதும் இப்படிதான் உள்ளதா?!

எனவே, மத்திய, மாநில அரசுகள் இதுக்குறித்து மாவட்ட மற்றும் மாநில அளவில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நடுநிலையாளர்களின் தலைமையில் விசாரணைக் குழுக்களை அமைத்து நாடு முழுவதும் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply