மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கூறி; தமிழ்நாட்டில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முனைவர் எல்.முருகன், இரண்டு தினங்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 18-தேதி தன் பூர்வீக ஊரான நாமக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்திற்கு சென்று, அங்கு தன் தாய் தந்தையை வணங்கி ஆசிப்பெற்றார்.
மேலும், முருகனின் தாய் வருதம்மாள், முருகனின் தந்தை லோகநாதன் ஆகியோருடன் சேர்ந்து, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உணவு அருந்தினர்.
அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக எல்.முருகன் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவரது எளிமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
”எந்த நிலை உயர்ந்தாலும்; வந்த நிலை மறவாதே” என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக எல்.முருகன் இன்றும் இருந்து வருகிறார். இது உண்மையிலுமே பாராட்டத்தக்கது.
இதைப் பார்க்கும்போது
”உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்”-என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் எமது நினைவுக்கு வருகிறது.
-கே.பி.சுகுமார் B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Great….. Minister sir