வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்!-தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம்!-அ.தி.மு.க, பா.ஜ.க. வெளிநடப்பு.

pr280821_14_TNLA

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும், விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறி, சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதற்கு பா.ம.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால் அ.தி.மு.க.-வும், பா.ஜ.க.-வும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

pr280821_15_TNLA

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply