கொள்ளையர்கள் அட்டகாசம்..!-அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்..! -காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

திருச்சி, ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட, திருவானைக்காவல் அருகே உள்ள நடுக்கொண்டையம்பேட்டை, மல்லிகைபுரம் பகுதியில் வழக்கம்போல் இரவில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மனோகரன் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரு நபர்கள்; ஒருவன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்க, மற்றொருவன் தூக்கத்தில் இருந்த மனோகரனின் ஆடைகளை உருவி, அவரை அடித்து; அவரது டவுசர் பாக்கெட்டில் இருந்த பணத்தைப் பறித்து சென்றுள்ளான்.

பணத்தைப் பறிகொடுத்த மனோகரன்; தூக்கத்தில் இருந்து எழுவதற்கு முயற்சிக்கும்போது, தடுமாறி தலைக்குப்புற விழுந்தார். அதன் பிறகு தட்டு தடுமாறி எழுந்து; திருடர்கள் சென்ற திசையை நோக்கி செல்வதற்கு மனோகரன் முயன்றபோது; மறுபடியும் தடுமாறி வீட்டின் எதிரில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் முன் பகுதியின் பக்கவாட்டில் மோதி; லாரியின் முன் டயர் பகுதிக்குள் விழுந்துள்ளார். இச்சம்பவங்கள் அனைத்தும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் கொள்ளையர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த மனோகரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மனோகரன் இன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி குற்றவியல் நடை முறைச் சட்டம் 174-வது பிரிவின் கீழ் வழக்கு (Crime No: 743/2021) பதிவு செய்துள்ளனர்.

XXXXXXXXXXXX

அதே போல் ஸ்ரீரங்கம் பகுதியில் கட்டிட மேஸ்த்திரியாக வேலைப் பார்த்துவரும் கீழமுல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த P.பாலக்கிருஷ்ணன் என்பவர், கொத்தனார்களுக்கு சம்பளம் போடுவதற்காக, கடந்த மாதம் அதாவது 16.08.2021 அன்று, ஸ்ரீரங்கம் பழைய பஸ்டாண்ட் அருகில் உள்ள கரூர் வைஸ்யா (KVB ) வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்தில் சீட்டிற்கு அடியில் உள்ள டிக்கியில் ரூ 150000/- -த்தை பத்திரமாக வைத்துவிட்டு; எதிரில் உள்ள கடையில் பிளாஸ்டிக் டியூப் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது டிக்கியில் இருந்த ரூ 150000/ -த்தை யாரோ திருடிச் சென்று விட்டார்கள்.

உடனே ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மேற்படி P.பாலக்கிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில் (CSR NO: 445/2021) சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி; ஸ்ரீரங்கம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இன்றுவரை இதுசம்மந்தமாக குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. பணத்தைப் பறிக்கொடுத்த நபர் மிகுந்த மன உளைச்சளில் இருந்து வருகிறார்.

இதுப்போன்ற குற்றச் சம்பவங்கள் இங்கு மட்டுமல்ல; தற்போது நாடு முழுவதும் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பல்வேறு இடங்களில் பணம், தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், ஆடு, மாடுகள்.. திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், வங்கி மற்றும் அடகு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை அருகில் இருந்தே நோட்டமிட்டு; அவர்கள் வெளியில் செல்லும்போது தகவல் தெரிவித்து திருடும் வழக்கமும் தற்போது நடைமுறையில் உள்ளது.

எனவே, பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது நல்லது.

திருட்டு, வழிப்பறி மற்றும் அதன் மூலம் நடக்கும் ஆதாயக் கொலைகளை முற்றிலும் தடுப்பதற்கு காவல்துறையின் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு இது களங்கத்தை உண்டாக்கும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply