யூடியூப் (The YouTube) நிறுவனத்தால் தடை செய்யப்பட்ட வீடியோ!- ”உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்களின் மேல்முறையீட்டால் மீண்டும் வெளியிடப்பட்டது!

2018- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22-ந்தேதி திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில், விஜயவாடாவை சேர்ந்த 25 பயணிகள் சுற்றுலா வேனில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு, ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த பொழுது, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எதிரே வந்த பயணிகள் பேருந்துக்கு வழிவிட்ட போது, சுற்றுலா வேன் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த விஜயவாடாவை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ. நமது ”உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் February 22, 2018, அன்று மாலை 3:31-க்கு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வீடியோ யூடியூப் (The YouTube) நிறுவனத்தால் தடை செய்யப்பட்டது.

நமது ”உள்ளாட்சித்தகவல்” www.ullatchithagaval.com ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள் மேல்முறையீடு (Appeal) செய்ததின் பெயரில், நமது மேல்முறையீட்டை மதிப்பாய்வு செய்த யூடியூப் (The YouTube) நிறுவனம். நமது ”உள்ளாட்சித்தகவல்” வெளியிட்ட வீடியோவை தடை செய்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளதோடு; நாம் வெளியிட்ட வீடியோவில் எந்தவித சமூக விதிமுறை மீறலும் இல்லையென்று உறுதியளித்த யூடியூப் (The YouTube) நிறுவனம், மீண்டும் ந்த வீடியோவை YouTubeல் இன்று (06/09/2021) வெளியிட்டுள்ளது.

மேற்காணும் வீடியோ சம்மந்தமான முழுமையானச் செய்தி மற்றும் படங்களுக்கு கீழ்காணும் இணைப்பைக் “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2018/02/22/31663/

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply