“செல்போன் டவர்” அமைத்து தருவதாக கூறிய மோசடி பேர்வழிகளிடம், ரூ.7 லட்சத்தை பறிக்கொடுத்த பெண்மணி!- 13 நபர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை!-நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்…!

மோசடி கும்பல்

சேலம், சித்தனூரைச் சேர்ந்த சகாயமேரி (வயது 55) என்பவர் தனது செல்போன் எண்ணிற்கு கடந்த 27.08.2020 ஆம் தேதி அன்று Inside Towers Pvt Limited என்ற நிறுவனத்தின் பெயரில், “செல்போன் டவர்” அமைத்து தருவதாக வந்த SMS -ஐ உண்மை என நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் Vodafone tower உங்கள் நிலத்தில் அமைத்து தருவதாகும், அதற்கு தங்களிடம் 1,350 சதுர அடி நிலம் இருக்க வேண்டுமெனவும், அதற்கு நாங்கள் ரூ.3,00,000/- அட்வான்ஸ் மற்றும் மாதம் தோறும் வாடகையாக ரூபாய் 35,000/- தருவோம் என சொல்லியுள்ளனர்.

அதற்காக transport charge, material charge, generator charge, documentation charge, labour charge, toll charge, commission charge என பல தவணைகளாக மொத்தம் ரூ.6,92,500/- பணத்தை தனது வங்கி கணக்கு மூலம் மேற்படி நபர்கள் அளித்த பல்வேறு வங்கி கணக்கிற்கு சகாயமேரி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், பணத்தை பெற்ற அந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் எண்களை switch off செய்துவிட்டனர். சகாயமேரி பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் பதறிப்போன சகாயமேரி, Tower அமைத்து தருவதாக கூறி தன்னை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த 11.09.2021 அன்று சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண். 19/2021 U/s 66D of information technology act 2000, 420 IPC )

இதனை தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பெயரில், காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், சைபர்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன், தினேஷ், இளங்கோவன் ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மோசடி பேர்வழிகள் பயன்படுத்திய செல்போன் எண்களை ஆராய்ந்து, எதிரிகள் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் சேலம் புதிய பேருந்து நிலையம் சென்று கண்காணித்து வந்தனர்.

அப்போது, திருப்பூரைச் சேர்ந்த மல்லையா (வயது 38), சந்திரசேகர் (வயது 36), நவீன் (வயது 21), சுதாகரன் (வயது 19), டெல்லியை சேர்ந்த சிவா (வயது 30), சூர்யா (வயது 24), திண்டுக்கல்லைச் சேர்ந்த தனசேகர் (வயது 27), மோகன் பிரபு (வயது 23), குணசேகரன் (வயது 23), பிரபு (வயது 20), சௌந்தரபாண்டியன் (வயது 28), அருண்குமார் (வயது 23), சதீஷ்குமார் (வயது 24) ஆகிய 13 நபர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்படி நபர்கள் பெங்களூரில் தங்கி தமிழ்நாடு முழுவதும் bulk SMS அனுப்பி inside towers Pvt limited என்ற பெயரில் டவர் அமைத்து தருவதாக பொதுமக்களை ஏமாற்றி, பணம் பறித்து வந்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மேற்படி மோசடி பேர்வழிகள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து, 2 லேப்டாப்கள், 34 செல்போன்கள், 45 சிம்கார்டுகள், 20 வங்கி கணக்கு புத்தகங்கள், ரூ.48,500/- ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு 25.09.2021 அன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

நவீனத் தொழிட்நுட்பத்தின் மூலம் இதுப்போன்ற பொருளாதார சைபர் குற்றங்கள் நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இத்தகைய மோசடி பேர்வழிகளிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply