மேம்பாலத்தின் பக்கவாட்டில் முறிந்து தொங்கிய இரும்பு குழாய்!-உயிர் சேதங்களை தடுத்த போக்குவரத்து காவலர்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மழை நீர் வடிவதற்காக பொருத்தப்பட்ட தரமற்ற இரும்பு குழாய்கள் அனைத்தும் இத்துப்போய் உள்ளது. இந்நிலையில், மன்னார்புரம் சிக்னல் அருகில் இருந்த இரும்பு குழாய் ஒன்று, இன்று (07.10.2021) காலை 10 மணியளவில் முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கியது.

இதைக்கண்ட அங்கு பணியில் இருந்த ஷேக் இஸ்மாயில் என்ற போக்குவரத்து காவலர், உடனே வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அந்த இடத்தை நெருங்க விடாமல் தடுத்து போக்குவரத்தை சீர்செய்துகொண்டே, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கும் தகவல் தெரிவித்ததோடு, சற்றும் தாமதிக்காமல், உடனே கிரேன் உதவியுடன் அந்த ஆபத்தான இரும்பு குழாயை அகற்றி, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மழை நீர் வடிவதற்காக பொருத்தப்பட்டுள்ள தரமற்ற இரும்பு குழாய்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு; எடைக்குறைவான PVC (Poly Vinyl Chloride) குழாய்களை பொருத்தவேண்டும். அப்போதுதான் இதுப்போன்ற ஆபத்துக்களை தடுக்க முடியும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply