காவிரி ஆற்றில் தத்தளித்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்!-திருச்சி அல்லூர் அருகே நடந்த மரணப் போராட்டம்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அல்லூர் ஊராட்சி, மேலபச்சேரி கிராமத்தில் வசித்து வரும் தங்கராசு என்பவரின் மகள் செல்வி.துளசிமணி (வயது35), தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த இவர்; இன்று (16.10.2021) காலை தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக காவிரி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட செல்வி.துளசிமணி; அந்த கரைக்கும் செல்ல முடியாமல்; இந்த கரைக்கும் திரும்ப முடியாமல், காவிரி ஆற்று நடுவே இடுப்பளவு தண்ணீரில் சிக்கிக்கொண்டார்.

தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைச் சொல்லி மரணப் பயத்தில் நடு ஆற்றில் தண்ணீரில் தவித்துக் கொண்டிருந் செல்வி.துளசிமணியை, ஆற்று கரையில் இருந்த நபர்கள் சப்தமாக குரல் கொடுத்து தைரியம் சொன்னதோடு, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்தவுடன் ப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஜீயபுரம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் மாணிக்கம் (பணி எண்:1744), சம்பவ இடத்திற்கு முதல் ஆளாக வந்தார். அதனைத் தொடர்ந்து தனிப்பிரிவு காவலர் சரவணக்குமார், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் ரோந்து வாகன காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நீச்சல் வீரர்கள் உதவி இருந்தால்தான் அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டக முடியும் என்பதை உணர்ந்த காவல்துறையினர்; சற்றும் தாமதிக்காமல் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நீச்சல் வீரர்கள், லைப்பாய், லைப் ஜாக்கெட், கயிறு உதவியுடன் ஆற்றில் குதித்து, தண்ணீரில் தத்தளித்த அப்பெண்ணை பத்திரமாக உயிருடன் மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.

இதுசம்மந்தமாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி ஜி.அனுசுயாவிடமும், திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அதிகாரியிடமும் மற்றும் ஜீயபுரம் காவல் நிலைய போலிசாரிடமும் நாம் தொடர்பு கொண்டோம்.

பொதுமக்கள், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரின் பொறுப்பான போர்கால நடவடிக்கையால், ஒரு பெண்ணின் உயிர் மரண விளிம்பில் இருந்து இன்று காப்பற்றபட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சையும் மற்றும் மனநல ஆலோசனையும் உடனே வழங்கப்பட வேண்டும். மீண்டும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காமல் அப்பெண்ணை பத்திரமாக குடும்ப உறுப்பினர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply