லஞ்ச ஒழிப்பு துறையினரின் நம்பகத்தன்மையை கேள்வி குறியாக்கும் பத்திரிகைச் செய்திக் குறிப்பு!

டாக்டர்.சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்.

தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது தொழில் கூட்டாளிகளின் வீடு, அலுவலகம், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்பட 50 இடங்களில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினர் அக்டோபர் 18-ந்தேதி அதிரடியாக சோதனை நடத்தினர்.

புதுக்கொட்டையில் 32 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும், திருச்சியில் 4 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும், செங்கல்பட்டில் 2 இடங்களிலும், மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைப்பெற்றது.

இந்த அதிரடி சோதனைகளில் பணம் ரூ.23,85,700/- , 4870 கிராம் தங்க நகைகளும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்களும் மற்றும் சொத்து பரிவர்த்தனை சம்மந்தமான ஆவணங்களும் கண்டறியபட்டதாகவும், இதில் இந்த வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.23,82,700/-, 19 ஹார்டு டிஸ்குகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை கைபற்றியதாக, 18.10.2021 அன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்ட தமிழ் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 18.10.2021 அன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்ட அதே ஆங்கில செய்திக் குறிப்பில் வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.23,85,700/-, 10 ஹார்டு டிஸ்குகள் கைபற்றப்பட்டதாக முன்னுக்கு பின் முரணாகவும்; தவறாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால் இதில் எது உண்மை?!

இதோ அதற்கான ஆதாரங்கள்:

இதில் எது உண்மை?!

இதில் எது உண்மை?!

18-10-2021-SC-at-50-places-including-the-residence-of-Tr.C.Vijayabhaskar-former-Minister-of-Health-and-Family-Welfare-his-family-members-close-relatives-friends-and-business-parters

ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ஆங்கிலம் 1 பக்கம்; தமிழ் 1 பக்கம் அடங்கிய ”Pdf Format” –ல் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில், இப்படி குழப்பத்தை ஏற்படுத்தியது யார்?! கணினியில் தட்டச்சு செய்தவர் கவனக்குறைவாக அடித்திருந்தாலும், அதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு முறைக்கு பல முறை படித்துப் பார்த்து பிழையை திருத்தி சரிசெய்து இருக்க வேண்டாமா? அப்படி என்ன அவசரம்?!

உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு முன்னாள் அமைச்சரின் இந்த வழக்கில்; பத்திரிகைச் செய்திக் குறிப்பின் தகவலே இந்த லட்சணத்தில் இருந்தால்; விசாரணை மற்றும் குற்றப்பத்திரிக்கை எந்த லட்சணத்தில் இருக்கும்?! இதன் மூலம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினரின் நம்பகத்தன்மையே கேள்வி குறியாகிவிடும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply