நன்மை செய்வதற்கு பணமோ; படிப்போ தேவையில்லை!-நல்ல மனசு இருந்தாலே போதுமானது!

சந்தீஷ் குப்தா-Sandesh Guptha-సందేశ్ గుప్తా.

தெலுங்கானா மாநிலம், மஞ்சூரியாள் மாவட்டத்தைச் சேர்ந்த “பிரண்ட்ஸ் அனிமல் டிரஸ்ட்” என்ற அமைப்பை நிறுவி நடத்திவரும் சந்தீஷ் குப்தா என்ற இளைஞர், விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தி தெலுங்கானா மாநிலம் முதல் இராமேஸ்வரம் வரையும், அதேபோல் இராமேஸ்வரம் முதல் தெலுங்கானா மாநிலம் வரை 60 நாட்களில் சுமார் 4,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நன்மை செய்வதற்கு பணமோ; படிப்போ தேவையில்லை; நல்ல மனசு இருந்தாலே போதுமானது!- என்பதற்கு சந்தீஷ் குப்தா மிக சிறந்த உதாரணம். ஆம், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சந்தீஷ் குப்தா; நண்பர்கள், உறவினர்கள் வழங்கும் நிதி உதவியை கொண்டு, வாயில்லா ஜீவன்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் தொடர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு, இத்தகைய அரிய சேவையை செய்து வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்திய பிராணிகள் நல வாரியம், இவரது சேவைக்கும், தேவைக்கும் வேண்டிய உதவிகளை வழங்க முன் வரவேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 28, 2021 5:44 pm

Leave a Reply