தீ விபத்தை தடுத்த காவலர் ரஜினி முத்துவிற்கு,பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு!

தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் ரஜினி முத்து.

இராமேஸ்வரம் போத்தார் சத்திரம் சோதனைச் சாவடி.

லட்சுமி விலாஸ் வங்கி (LVB) ஏடிஎம் (ATM)

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அமைந்துள்ள ”மார்வாடி தாபா” என்ற தனியாருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில், நவம்பர் 15 -ந்தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த உணவகத்தில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பதறியடித்துக கொண்டு அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர்.

அப்போது அந்த உணவகம் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள போத்தார் சத்திரம் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையின 6-வது அணியைச் சேர்ந்த காவலர் ரஜினி முத்து விரைந்து செயல்பட்டு, அருகாமையில் அமைந்துள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் (LVB) ஏடிஎம் (ATM) மையத்தில் இருந்த தீ அணைக்கும் கருவியை எடுத்து, தனி ஒரு நபராக அந்த உணவகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே; சாமர்த்தியமாக செயல்பட்டு தீ விபத்தை தடுத்த காவலர் ரஜினி முத்துவை, அப்பகுதி மக்களும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காவலர் ரஜினி முத்துவை நாம் தொடர்பு கொண்டோம்.

நவம்பர் 15 -ந்தேதி இராமேஸ்வரம் போத்தார் சத்திரம் சோதனைச் சாவடியில் நான் பணியில் இருந்தபோது; அன்று மாலை 6.45 மணி இருக்கும் அந்த ஹோட்டல் மேல் இருந்து திடீரென புகை வருவதையும்; ஹோட்டல் உள்ளே இருந்து அனைவரும் பதட்டமாக வெளியே ஓடிவருவதையும் நான் பார்த்தவுடன், எனது உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துட்டு; உடனே அந்த ஹோட்டலை நோக்கி ஓடினேன்.

சமையல் கேஸ் கசிவு அல்லது எலக்ட்ரிக்கல் பயராக இருக்குமோ? என்று கருதி; உடனே ஹோட்டலின் மின்சார மெயின் சுவிட்சை ஆப் செய்யும்படி சொல்லிவிட்டு, அருகாமையில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை அணைத்தேன்.

இவ்வாறு காவலர் ரஜினி முத்து (PC:4483) நம்மிடம் தெரிவித்தார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply