16 வயது பள்ளி மாணவி தற்கொலை!-காவல்துறை வழக்குப் பதிவு!-அவர் எழுதிய கடிதம்; செல்போன் பதிவு; உடற்கூறு ஆய்வில் எந்த தடயமும் சிக்கவில்லை.

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தன் அம்மாவின் அரவணைப்பில் வசித்து வந்த மாணவி ஒருவர், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு; வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தற்போது வயது 16 ஆண்டுகள் முடிந்து 5 மாதங்கள் ஆகிறது.

தற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதியதாக சொல்லப்படும் கடிதம்.

இது சம்பந்தமாக கரூர் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு Crime No: 592/2021 செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி நன்றாக படிக்க கூடியவர். அவர் செல்போன் பதிவுகளை ஆராய்ந்த வகையில் அவரை யாரும் மிரட்டியதாகவோ; வற்புறுத்தியதாகவோ எந்த பதிவுகளும் இல்லை.

உடற்கூறு ஆய்வைப் பொருத்தவரை உடல் ரீதியாக அவர் ஒரு ஒழுக்கமான பெண் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

குடும்பத்தில் அவர் ஒரே பெண் என்பதால் யாரிடமும் மனம் விட்டு பேசும் பழக்கம் அவருக்கு இல்லை. ஆனால், தனிமையில் அதிக நேரம் செல்போன் உபயோகிப்பதை அவர் வழக்கமாகவும்; செல்போன் மட்டுமே தன் உலகமாகவும் அவர் இருந்து வந்திருக்கிறார்.

செல்போனில் கொலை, கொள்ளை பேய் மற்றும் ஆவி சம்பந்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை திரும்பத் திரும்ப பலமுறை பார்ப்பதையே தனது பொழுதுபோக்காக அவர் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவர் நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்காக கஷ்டப்பட்டு, கடன் பட்டு வாங்கி கொடுத்த செல்போன்; பல குழந்தைகளின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது.

எனவே, ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் குழந்தைகளை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிக உன்னிப்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கல்வி கற்கும் நேரம் தவிர; மற்ற நேரங்களில் ஆண்ட்ராய்டு மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கக்கூடாது.

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அன்பானக் கவனத்திற்கு:

நம் வீட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளிடம், செல்போனை தூர வைத்துவிட்டு, தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது மனம்விட்டு பேசுங்கள்.

அவர்கள் உண்ணும் உணவில் இருந்து; அவர்கள் அன்றாடம் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பியது வரை அனைத்து விபரங்களையும் ஒன்றுவிடாமல் அன்போடும், அக்கறையோடும் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல கூடாத ரகசியம் குழந்தைகளுக்கும்; குழந்தைகளிடம் கேட்ககூடாத விசியம் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதுவும் இல்லை” என்பதை முதலில் குழந்தைகளுக்கு வெளிப்படையாக புரிய வையுங்கள்.

குழந்தைகளின் சின்ன, சின்ன குறும்புதனங்களையும்; சின்ன, சின்ன தவறுகளையும் பெரிதுப்படுத்தாதீர்கள். அதற்காக அவர்ளை வெறுத்து ஒதுக்காதீர்கள். நீங்கள் அப்படி செய்தால்; அவர்கள் உங்களிடம் எந்த தகவலையும் சொல்ல முன்வர மாட்டார்கள். ‘அம்மாக்கிட்ட சொன்னால் திட்டுவார்; அப்பாவுக்கு தெரிந்தால் அடிப்பார்’- என்ற அச்சத்தை குழந்தைகளிடம் உருவாக்காதீர்கள்.

குழந்தைகளை பொது இடங்களிலும் மற்றும் நம் குடும்பத்திற்கு தொடர்பு இல்லாத பிறர் முன்னிலையிலும் கேவலமாக பேசாதீர்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தைகளை குற்றப்படுத்தாதீர்கள். குழந்தைகளை வெளிப்படையாக புகழுங்கள்!- அவர்களிடம் குற்றம், குறைகள் ஏதாவது இருந்தால் அதை ரகசியமாக சொல்லி திருத்துங்கள்.

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள்தான், அதை வெளியில் தேட தொடங்குகிறார்கள். அதனால் பல விரும்பதகாத சம்பங்களுக்கும் துணிகிறார்கள்.

குழந்தைகள் வளர்ப்பு என்பது வெறும் கடமையல்ல!-அது ஒரு தவம். ஆம், ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமம்; ஒரு நல்ல தகப்பன் ஆயிரம் குருவுக்கு சமம்; ஒரு நல்ல சகோதர, சகோதிரிகள் லட்சம் நண்பர்களுக்கு சமம்; மொத்தத்தில் நல்லதொரு குடும்பம், ஒரு பல்கலைக் கழகம். இதை உணராத காரணத்தால்தான் இதுப்பொன்ற அசாம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

கல்வி முக்கியம்தான்!-ஆனால், அதைவிட குழந்தைகளின் எதிர்காலமும், உயிரும் அதிமுக்கியம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

அப்போதுதான் இதுப்போன்ற துயரங்களை நாம் முழுமையாக தடுக்க முடியும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply