போலிஸ்கிட்ட சொன்னா குடும்பத்தோட ரோட்ல அறுத்துப் போட்டுடுவோம்!-சாலையோரம் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தும் நபரிடம், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சமூக விரோதிகளை, கொத்தாகப் பிடித்த தாம்பரம் போலிசார்.

சென்னை, தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி, அறுவாள் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி, செயின் பறிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த லோகேஷ் என்கின்ற லோகேஸ்வரன், விஜி என்கின்ற விஜயன், ஆலன் என்கிற சின்னா, டேவிட் ஆகிய நான்கு நபர்களையும் தாம்பரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சாலையோர டிபன் கடை நடத்தி வரும் முஜிப் ரகுமான் என்பவர் இவர்கள் மீது கொடுத்த புகாரின் பேரில், தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு (CRIME NUMBER: 935/2021) செய்து, குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த நான்கு நபர்கள் மீதும், இந்திய தண்டனை சட்டம் 147, 148, 341, 323, 294(b), 392, 397, 427, 336, 506 (ii) ஆகிய 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply