நாகலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில், திஜித் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 3.30 மணி அளவில் சுரங்க கூலி தொழிலாளர்கள் வேலை முடித்து கிராமத்தை நோக்கி ”பொலிரோ” வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை வன்முறையாளர்கள் என்று கருதி, அந்த அப்பாவி கூலித் தொழிலாளர்கள் மீது பாரா மிலிடரியை சேர்ந்த ஆயுதப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். பல பேர் காயமடைந்தனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவானது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து நாகலாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆன்லைன் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பாவி கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆயுதப் படையினர் மீது, திஜித் காவல் நிலைய போலீசார் தானாக முன்வந்து இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 302, 307 –ன் கீழ் (கொலை மற்றும் கொலை முயற்சி) வழக்கு (Crime No: 027/2021) பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை நாம் பதிவேற்றம் செய்வதற்கு முன்பு; அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி மாலை வரை, நமக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com