ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட பலர் உயிரிழந்தனர்!-குன்னூரில் நடந்த துயரம்.

இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத்.

தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட மொத்தம் 9 நபர்கள் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பி குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்லும் வழியில், அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட பலர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu. An Inquiry has been ordered to ascertain the cause of the accident.

தமிழகத்தின் குன்னூர் அருகே சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply