பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெறும்பூரில் நடைப்பெற்றது.

திருச்சி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை பரிமளா தலைமையிலும் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழச்சியில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் ரம்யா மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 198, குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும் குடும்ப வன்முறை சட்டம் வரதட்சணை தடுப்பு சட்டம், பணித் தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் , பெண்களுக்கான உதவி மைய எண் 181 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் குழந்தைகள் மத்தியில் வெளியிடப்பட்டும் ஒட்டப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ஆர்.சிராசுதின்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply