செமஸ்டர் தேர்வு முடிவு குளறுபடி விவகாரம்!-ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை உடனே அழைத்துப் பேச வேண்டும்.

செமஸ்டர் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடியால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் விரக்தியில் உள்ளனர். தேர்வு முடிவு தாளில் சிலவற்றில் மாணவர்கள் பெயருக்கு பதிலாக ”ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா” என்று பதிவாகி உள்ளது என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேளாண்மை பல்கலை வளாகத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்த செய்முறை தேர்வுகளின் விடைத் தாள்களும் திருத்தப்படாமல், தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வு முடிவை வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் மறுபரிசீலனை செய்யவில்லையென்றால்; எங்கள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து.போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளை ஏற்காமல், மீண்டும் தேர்வு எழுதும் படி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக இப்பிரச்சனை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. தேர்வு எழுதும் போது மாணவர்கள் மோசடி செய்து இருந்தால் அந்த வீடியோவை காண்பிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத பல்கலைக்கழக நிர்வாகம், வேளாண்மை கல்லூரி மாணவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தனித்தனியாக மிரட்டும் வேலையை அந்தந்த வேளாண்மை கல்லூரி நிர்வாகிகளின் மூலம் தற்போது செய்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடு, தமிழ்நாடு அரசுக்கு தற்போது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாணவர்களை உடனே அழைத்து பேசி, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

வேளாண் பல்கலைக்கழக நடவடிக்கை குழுவின் முடிவு.

TN.AGRI-UNIVERSITY

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோள்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

court-order

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/12/04/64834/

Leave a Reply