வாகன சோதனையின் போது வாக்குவாதம்; அபராதம்; கைகலப்பு!-போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.P.M நகை கடை அருகே 02.01.2022 மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் என்பவருக்கும், தலைக்கவசம் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துபட்டியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் வாகன சோதனையின்போது ரூ.600/- அபராதம் விதித்த வகையில் ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாக இருவருக்குமிடையில் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேஷ் என்பவர், தன்னை கத்தியால் குத்த வந்ததாக போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் எழுத்துபூர்வமாக கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் மேற்படி வெங்கடேஷ் என்பவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 294 (b) , 353, 307, 506 (ii) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு (CRIME No: 10/2022) பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply